Wednesday, 21 November 2018
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் Featured

விண்வெளி ஆராய்ச்சிக்காக, விண்வெளியில், பல்வேறு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளன.


அங்கு ஆராய்ச்சி பணிக்காக சென்ற, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த மூன்று பேர், சோயுஸ் விண்கலம் மூலம், நேற்று மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் வந்து சேர்ந்தனர்.

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள, சோயுஸ் விண்கலம் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

அமெரிக்காவைச் சேர்ந்த வீராங்கனை கேதே ரூபின்ஸ், விண்வெளியில், டி.என்.ஏ., எனப்படும் மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இவருடன், ரஷ்யாவைச் சேர்ந்த அனதோலி இவானிஷின், ஜப்பானைச் சேர்ந்த தகுயா ஓனிஷி ஆகியோர், 115 நாட்கள் பயணத்துக்கு பின், நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

ரூபின்ஸ், ஓனிஷிக்கு, இது முதல் பயணமாகும்; இவானிஷின், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஐந்து மாதங்கள் பயணம் மேற்கொண்டவர்.