அப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் ஒபாமா, வெள்ளை மாளிகையின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,
''கடந்த 2009ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினேன் .
இந்தியா சென்ற போது, எனக்கும் மனைவி மிச்செல்லுக்கும் , அங்குள்ள மக்கள் அளித்த வரவேற்பை மறக்க முடியாது.
இதே போன்ற தீபாவளியன்று, மும்பையில் மக்கள் எங்களை வரவேற்றனர்.
எங்களுடன் நடனமாடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இந்த வருடம் எனது அலுவலகத்தில், விளக்கேற்றி தீபாவளி கொண்டாடுவதில் பெருமைப்படுகிறேன்.
வாழ்க்கையில், இருளை அகற்றி, வெளிச்சத்தை கொண்டு வருவதை இந்த விளக்கு குறிக்கிறது.
இந்த பாரம்பரியத்தை அடுத்து வரும் அதிபரும் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது கொள்கிறேன்.'' என்று
தனது வாழ்த்து செய்தியை தனது , முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் .