Tuesday, 31 March 2020
Huawei நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக நாமத் தூதுவராக லயனல் மெஸ்ஸி நியமனம்!

Huawei நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக நாமத் தூதுவராக லயனல் மெஸ்ஸி நியமனம்! Featured

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பாடல்கள் தீர்வுகளை வழங்குவதில் உலகில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனமான Huawei நிறுவனத்தின் புதிய சர்வதேச வர்த்தகநாம தூதுவராக முன்னணி கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி அவர்களை நியமித்துள்ளமை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது.

மகத்துவத்தை இணைத்து, பகிரப்பட்ட பெறுமதியை நோக்கிய பயணத்தில் மக்கள் மற்றும் வர்த்தகநாமங்களுடன் ஒன்றிணைந்துள்ளதை லயனல் மெஸ்ஸியுடனான பங்குடமை புலப்படுத்துகின்றது.

எம்முன் எழுகின்ற சவால்கள் நாம் வேண்டுபவையையும், விரும்புவனற்றையும் சாதிப்பதற்கு எம்மைத் தூண்டுகின்றன. மகத்துவத்துடன் இணைந்து கொள்வதற்கு, வளர்ச்சி, கற்றல், அனுபவங்கள் மற்றும் கஷ்டங்கள் என நாம் இன்று இந்த அளவிற்கு சிறப்பான ஸ்தானத்தில் திகழுவதற்கு ஏதுவான எமது பயணத்தின் பக்கங்களை நாம் பெரிதும் மதிக்கின்றோம். இதனை சிறப்பாகப் புரிந்துகொண்டுள்ளவர்கள், மென்மேலும் சிறப்பதற்கு வெற்றியை மட்டும் எப்போதும் பின்தொடர்வதை விடுத்து, சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் தயாராகவே உள்ளனர். இந்த தனித்துவமான பண்பே Huawei மற்றும் லயனல் மெஸ்ஸி இடையிலான நேர்த்தியான தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

“குறிப்பாக Huawei பெரிதாக ஈடுபாடுகளைக் கொண்டுள்ள ஐரோப்பா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா பிராந்தியங்களில் மகத்துவத்தை இணைப்பதற்கு, எமது வா;த்தகநாமத்தின் மீது மக்கள் கவனம் செலுத்தி, விடாமுயற்சியுடன், திருப்புமுனையொன்றை ஏற்படுத்துவதை எமது வர்த்தகநாமம் ஊக்குவிப்பதற்கு லயனல் மெஸ்ஸி எமக்கு உதவுவார். அவரும், நாமும் கடந்து வந்துள்ள பாதையை பெரிதும் மதிப்பதுடன், எழுகின்ற ஒவ்வொரு புதிய சவாலுடனும், வெற்றிக்கான பயணத்தைக் கண்டறிவதில் புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளுடன், எமது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டின் மூலமாகவும் இன்று இத்தகைய ஒரு ஸ்தானத்தில் திகழ்கின்றோம்” என்று Huawei நுகர்வோர் வர்த்தகத்துறைக் குழுமத்தின் கைத்தொலைபேசி வியாபாரத்திற்கான தலைமை அதிகாரியான கெவின் ஹோ குறிப்பிட்டார்.

மகத்துவத்துடன் இணைப்பதால், நாம் எமது தீவிர உணர்வை எமது வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்துகின்றோம். இந்த எண்ணக்கரு லயனல் அவர்களின் வாழ்க்கையையும் அவரது கால்பந்தாட்ட வரலாற்றையும் அச்சொட்டாகப் பிரதிபலிக்கின்றது. மெஸ்ஸி அவர்களின் வாழ்க்கையில் தொழில்ரீதியான கால்பந்தாட்டத்தில் ஆட வேண்டும் என்ற அவரது அபிலாசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு அவர் தாய்நாட்டை விட்டு சென்றது அடங்கலாக அவரது முயற்சிகளுக்கு அவரது குடும்பமும் எப்போதும் உறுதுணையாக உள்ளது.

messi1 600px 16 03 21