Tuesday, 31 March 2020
சிங்கருக்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உற்பத்தி பிரதிநித்துவ அந்தஸ்து

சிங்கருக்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உற்பத்தி பிரதிநித்துவ அந்தஸ்து Featured

சிங்கரின் X Series Notebook கணினிகள் அனைத்தும் புதிய அசல் வின்டோஸ் 10 OS தளமேடையில் கிடைக்கவுள்ளன.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்திற்கு மைக்ரேசொப்ட் நிறுவனத்திடமிருந்து அதன் உற்பத்தி பிரதிநிதித்துவ அந்தஸ்து கிடைக்கப்பெற்றுள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி தலைமை அதிகாரி இஸ்ட்வான் பாப், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான வதிவிட முகாமையாளரான பிறையன் கீலி, தென் கிழக்கு ஆசியா புதிய சந்தைகளுக்கான அசல் உபகரண உற்பத்தியாளர்கள் துறைப் பணிப்பாளரான புபுது பஸ்நாயக்க, சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ், சிங்கர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகத் துறை பணிப்பாளரான மகேஷ் விஜேவர்தன, சிங்கர் நிறுவனத்தின் இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் மீடியா துறை சந்தைப்படுத்தல் முகாமையாளரான வஜிர தென்னக்கோன், மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் கணினி உற்பத்தித் துறையின் வா;த்தகநாம முகாமையாளரான தயாளன் இம்மனுவல் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

உள்நாட்டிலுள்ள அசல் உபகரண உற்பத்தியாளர்களின் பங்காளராக சிங்கர் நிறுவனத்தின் இப்புதிய வியாபார முயற்சியானது, மைக்ரோசொப்ட் மற்றும் இன்ரெல் ஆகிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் மூலோபாய முன்னுரிமையாக காணப்படுகின்றது. இதன் மூலமாக சாதனங்கள் துறையின் வளர்ச்சிக்கு இடமளித்து, இன்னும் விசாலமான வர்த்தக மற்றும் நுகர்வோர் பிரிவை எட்டுவதற்கும் உதவும். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பங்காளர்களிடமிருந்து இந்நிறுவனம் எதிர்பார்க்கின்ற மிகச் சிறந்த தர நடைமுறைகளை சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம் வழங்குகின்றமை மற்றுமொரு சாதனை இலக்காக அமையப்பெற்றுள்ளதுடன், இந்த வர்த்தகநாமம் சர்வதேச அளவில் இனங்காணப்படுவதை மேலும் மேம்படுத்தும்.

உற்பத்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்தஸ்தைப் பெற்றுள்ள நிறுவனம் என்ற வகையில் மைக்ரோசொப்ட் ஸ்ரீ லங்கா நிறுவனம் இந்த ஏற்பாட்டின் மூலமாக வழங்குகின்ற ஏராளமான அனுகூலங்களை விரும்புகின்ற பாரிய அளவிலான பல்தேசிய நிறுவனங்களுக்கு இணையான ஸ்தானத்திற்குள் சிங்கர் தற்போது காலடியெடுத்து வைத்துள்ளது. இந்த மூலோபாய நடவடிக்கை மூலமாக சர்வதேச அளவில் மிகச் சிறந்த வர்த்தகநாமங்களுள் ஒன்றாகத் திகழ்கின்ற சிங்கர், இந்த உடன்படிக்கையின் கீழ் மைக்ரோசொப்டுடன் இணைந்து தொழிற்பட்டு, ஏனைய பல்தேசிய நிறுவனங்களுக்கு ஒப்பான அந்தஸ்துடன் தொழிற்படும். மேலும் இந்த உடன்படிக்கையானது சிங்கர் தனது வர்த்தகநாமத்தை உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் ஊக்குவிக்கவும் உதவும்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி தலைமை அதிகாரி இஸ்ட்வான் பாப் அவா;கள் கூறுகையில் “உலகளாவியரீதியில் உள்நாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களைக் கொண்ட எமது விசாலமான வலையமைப்பானது உள்நாட்டு சந்தைகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறுபட்ட சாதனங்கள் மூலமாக மைக்ரோசொப்டின் மிகச் சிறந்த அனுபவத்தை விநியோகிக்க எமக்கு உதவியுள்ளது. எமது உற்பத்தி பிரதிநிதித்துவ அந்தஸ்தைக் கொண்டுள்ள நிறுவனமாக சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தைக் கொண்டிருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து உள்நாட்டு சாதன துறைக்கு காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என உறுதியாக நம்புகின்றேன்” என்று குறிப்பிட்டார்.

சிங்கர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகத் துறை பணிப்பாளரான மகேஷ் விஜேவர்தன கூறுகையில் “உயர் தரத்திலான உற்பத்திகளை வழங்கி, அசல் மென்பொருளை உபயோகிப்பதை ஊக்குவிக்கின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில் சர்வதேச தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசொப்டிடமிருந்து அதன் உற்பத்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்தஸ்தைக் கொண்டுள்ள நிறுவனமாக மாறியுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாடெங்கிலுமுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்கவேண்டும் என்ற எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்கும், ஈடுபாட்டிற்கும் இது சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

சிங்கர் X Series Notebook கணினிகள் நவீன இன்ரெல் 6 ஆவது தலைமுறை புரோசசர்களுடன் வெளிவருகின்றன. முன்பை விடவும் சிறப்பான வேகத்துடன் அமைந்துள்ள Windows 10, பல்வேறுபட்ட தொழிற்பாடுகளை ஏக காலத்தில் முன்னெடுப்பதற்கான வாய்ப்பை பாவனையாளர்களுக்கு வழங்கி, அவற்றை இன்னும் விரைவாக முன்னெடுக்க உதவி பாவனையாளர்களுக்கு வேண்டிய வகையில் இணையத் தொழிற்பாட்டை அவர்களுக்கு வழங்குகின்றது.

சிங்கர் X Series மற்றும் Dell வர்த்தகநாமங்களின் கீழ் மேசைக்கணினி மற்றும் மடிகணினி என அனைத்தையும் சிங்கர் சந்தைப்படுத்தி, விநியோகித்து வருகின்றது. இந்த உற்பத்திகள் அனைத்திற்கும் சிங்கரின் இணையற்ற உத்தரவாதமும், நாடளாவியரீதியிலான சேவையும் கிடைக்கப்பெறுகின்றன.