Tuesday, 31 March 2020
The Body Shop இலங்கையில் அங்குரார்ப்பணம்!

The Body Shop இலங்கையில் அங்குரார்ப்பணம்! Featured

இலங்கையில் புதிய விற்பனை நிலையத்தை நிறுவியுள்ளதன் மூலம் இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளதுடன், அழகியல் பாரம்பரியத்தில் 40 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது.

கொழும்பு 29.02.16: அழகியல் தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் உலகப்புகழ் பெற்ற பிரித்தானிய நாமமான The Body Shop இலங்கையில் தனது விற்பனையகத்தை நிறுவியுள்ளது.

பிரித்தானியாவின் லிட்டில் ஹம்ப்டன் நகரில் டேம் அனிட்டா ரொட்டிக் என்பவரால் 1976 ஆம் ஆண்டு The Body Shop நிறுவப்பட்டிருந்தது. இந்த அழகியல் வர்த்தக நாமம், சமூக செயற்பாடுகள் முறையில் அதிகளவு முக்கியத்துவத்தை வழங்கியிருந்ததுடன், சிறந்ததுக்கான உத்வேகமாக வியாபாரம் ஒன்று திகழக்கூடும் எனும் தொனிப்பொருளுக்கமைய கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

உலகில் உயர் தரம் வாய்ந்த, இயற்கையான முறையிலமைந்த சரும பராமரிப்பு, கூந்தல பராமரிப்பு மற்றும் ஒப்பனை சேர்ப்பு தயாரிப்புகளை நிலைபேறான வகையிலும், ஒழுக்கமான முறையிலும் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை The Body Shop முன்னெடுத்து வருகிறது.

நிறுவனத்தின் தூரநோக்க திட்டத்துக்கமைய, இந்த மாதத்தின் முற்பகுதியில், உலகளாவிய ரீதியில் முன்னோடியான புதிய சர்வதேச சமூக பொறுப்புணர்வு கொள்கைத் திட்டமொன்றை The Body Shop ஆரம்பித்திருந்தது. ஒழுக்கமான வியாபாரத்தை முன்னெடுப்பதில் The Body Shop முன்னோடியாக திகழ்வது எனும் நிலையை மேலும் உறுதி செய்யூம் வகையில் அமைந்திருப்பதுடன், The Body Shop வியாபாரத்தின் அடுத்த கட்ட அபிவிருத்தியை வரையறுக்கும் வகையிலும் அமைந்திருக்கும். ‘Enrich Not Exploit’ எனும் நிலைபேறான கட்டமைப்பையூம் வர்த்தக நாமம் நிறுவியுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு அளவிடப்படக்கூடிய 14 குறித்த இலக்குகளையும் நிறுவியுள்ளது.

The Body Shop இன் 100ம%ஆன இயற்கை மூலப்பொருட்களை இனங்காணக்கூடியமை மற்றும் நிலைபேறான முறையில் பெற்றுக் கொண்டமை ஆகியன புதிய இலக்குகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. The Body Shop விற்பனையகங்களின் வலு நுகர்வை வருடாந்தம் 10 சதவீதத்தால் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், The Body Shop இன் 70சதவீதமான பொதிகளில் படிம எரிபொருள் பயன்படுத்தப்படாமையை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

சகல The Body Shop தயாரிப்புகளும் சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகின் நான்கு பாகங்களிலிருந்து இவை பெற்றுக் கொள்ளப்படுவதுடன், விலங்குகளில் இவை பரிசோதிக்கப்படுவதில்லை. 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3000 விற்பனை நிலையங்களை The Body Shop கொண்டுள்ளது.

The Body Shop இன் வர்த்தக நாம தூதுவரான ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், காலி வீதியில் அமைந்துள்ள ஃபெயார்லைன் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய காட்சியறையை அங்குரார்ப்பணம் செய்திருந்தார். இந்நிகழ்வில், The Body Shop இலங்கையின் பணிப்பாளர் ட்ரெவர் ராஜரட்னம் மற்றும் சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷோக் பத்திரகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள விற்பனையகத்தின் உரிமையாண்மையை சொஃப்ட்லொஜிக் குழுமம் தன்னகத்தே கொண்டுள்ளது.

சரும பாதுகாப்பு, குளியல், ஷவர், உடல் பராமரிப்பு, ஒப்பனை, கூந்தல், நறுமணம், ஆண்களுக்கான தயாரிப்புகள் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் போன்ற பல தெரிவுகளை 100 சதவீதம் சைவமான தயாரிப்புகளாக The Body Shop தன்னகத்தே கொண்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, இந்த விற்பனையகத்தின் மூலமாக, சரும பராமரிப்பு நிபுணத்துவ ஆலோசனைகள் மற்றும் ஒப்பனை செயற்பாடுகள் மற்றும் விசேடமான அலங்கார செயற்பாடுகள் போன்றன வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் The Body Shop ஸ்ரீ லங்கா பணிப்பாளர் ட்ரெவர் ராஜரட்னம் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் The Body Shop விற்பனையகத்தை நிறுவுவதற்கான இந்த வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் ஸ்தாபகரான அனிடா ரொட்டிக்கின் நோக்கான, உலகின் மிகவும் நிலைபேறான மற்றும் ஒழுக்கமான அழகியல் தயாரிப்பு வர்த்தக நாமமாக திகழ்வது என்பதற்கமைய The Body Shop தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இலங்கையிலும் அவரின் பாரம்பரியத்தை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தமை எமக்கு பெருமை சேர்த்துள்ளதுடன்இ எமது இயற்கையான உணர்திறன் வாய்ந்த தயாரிப்புகளின் நாட்டம் காண்பிக்கும் இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அனுகூலம் நிறைந்ததாக அமைந்திருக்கும்” என்றார்.

வர்த்தக நாமத்தின் தொனிப்பொருள் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்இ “மக்களுக்கு வளமூட்டுவது மற்றும் புவிக்கு வளம் சேர்ப்பது தொடர்பில் The Body Shop தன்னை முழு மனதுடன் அர்ப்பணித்துள்ளது. இந்த பொறுப்பு வாய்ந்த வியாபார நெறிமுறையில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட எமது அர்ப்பணிப்பான ‘The Body Shop’ என்பது சூழலையும் சமூகத்தையும் பாதுகாத்து மெருகூட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

எமது சகல வியாபார பிரிவுகளுமான சேர்மானங்கள், தயாரிப்புகள், பொதியிடல், விற்பனையகங்கள், ஊழியர்கள், விநியோகஸ்த்தர்கள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் என அனைத்திலும் இது பின்பற்றப்படுகிறது” என்றார்.

The Body Shop இன் இலங்கையின் வர்த்தக நாம தூதுவர் ஜக்குலின் பெர்னான்டஸ் கருத்து தெரிவிக்கையில், The Body Shop உடன் நீண்ட காலமாக நான் தொடர்பில் உள்ளதுடன், முற்றிலும் இயற்கையான மற்றும் ஒழுக்கமான அழகியல் வர்த்தக நாமத்துக்கு எனது நாட்டின் வர்த்தக நாம தூதுவராக திகழ வாய்ப்புக் கிடைத்தமை என்பது உண்மையில் மகிழ்ச்சியூட்டும் விடயமாக அமைந்துள்ளது.

எனது நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த வர்த்தக நாமத்தின் அறிமுக நிகழ்வில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு நான் அதிகளவு பெருமையடைவதுடன், இலங்கையின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு The Body Shop என்பது ஒரு சிறந்த அன்பளிப்பாக அமைந்திருக்கும். The Body Shop விற்பனையகங்களுக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தடவையூம் விஜயம் செய்யும் போதும், அவர்கள் புத்துணர்வை உணர்வார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் இந்த தயாரிப்புகளை அதிகளவு அனுபவிப்பதைப் போல அவர்களும் அனுபவிப்பார்கள்” என்றார்.

தனது விருப்பமான The Body Shop தயாரிப்புகள் தொடர்பில் ஜாக்குலின் கருத்து தெரிவிக்கையில், The Body Shop தயாரிப்புகளுக்கு நான் அடிமை. The Body Shop தயாரிப்புகளில் உலகின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த சிறந்த மூலப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனக்கு மிகவூம் பிடித்த தயாரிப்பாக Fuji Green Tea உடல் பராமரிப்பு தெரிவு காணப்படுகின்றது.

இது “உணர்வை அடிப்படையாக கொண்ட பராமரிப்பு தெரிவாகும்” இது கிறீன் தேயிலையின் அன்டி ஒக்சிடன்ட்களின் அனுகூலங்களை கொண்டுள்ளது. மூன்று படிமுறை கரணநெறியான தூய்மையாக்கல் மற்றும் நச்சு நீக்கம், நிறைவாக்கல் மற்றும் புத்துணர்வூட்டல் போன்ற செயற்பாடுகளின் மூலம் உடலுக்கு முழுமையாக புத்துணர்வை வழங்கி மனதுக்கும் புத்துணர்வை சேர்க்கிறது” என்றார்.

சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷோக் பத்திரகே இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், “The Body Shop உடன் இணைந்துள்ளதையிட்டு நாம் மிகவூம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வர்த்தக நாமத்துக்கு நாம் அதிகளவு மதிப்பை கொண்டுள்ளதுடன்இ எமது பெறுமதிகள், நோக்கம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றுடன் பெருமளவூ ஒருமைப்பாட்டைக் கொண்டுள்ளது. கொழும்பில் புதிய The Body Shop விற்பனையகத்தை ஆரம்பிப்பதையிட்டு நாம் மிகவூம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

The Body Shop பற்றி:

1976 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிரைட்டன் பகுதியில் அனிட்டா ரொட்டிக் என்பவரால் The Body Shop நிறுவப்பட்டிருந்ததுடன், சர்வதேச அழகியல் வர்த்தக நாமமாக திகழ்கிறது. உயர் தரம் வாய்ந்த, இயற்கையான சருமபராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு மற்றும் ஒப்பனை தயாரிப்புகளை நிலைபேறான வகையிலும் ஒழுக்கமான முறையிலும் உற்பத்தி செய்து வழங்குவதன் மூலம் உலகில் நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்துவதில் The Body Shop கவனம் செலுத்தி வருகிறது. 2006 ஆம் ஆண்டில் L’Oréal இனால் கையகப்படுத்தப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, சிறந்ததுக்கான உத்வேகமாக வியாபாரம் ஒன்று திகழக்கூடும் எனும் தொனிப்பொருளுக்கமைய கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 3000க்கும் அதிகமான விற்பனையகங்களை The Body Shop கொண்டுள்ளது.

இலங்கையில் The Body Shop இன் அறிமுகத்தை குவெஸ்ட் ஹோல்டிங்ஸ் லங்கா பிரைவட் லிமிட்டெட் முன்னெடுத்திருந்தது.
Bodyshop1 600px 16 03 01

Last modified on Thursday, 03 March 2016 08:14