தொகுதிவாரி அடிப்படையில் 2017 ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்- ஜனாதிபதி Featured
20 July 2016
புதிய தொகுதிகளின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் எதிர்வரும் வருட முதல் காலாண்டில் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்தக்கூட்டம் நேற்று இரவு இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்டது.
இதன்போது உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் கட்சிக்குள் கொண்டு வரவேண்டிய உள்ளக மாற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்தக்கலந்துரையாடலில் கட்சியின் போசகர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் பங்கேற்றார்.