அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார் Featured
20 July 2016
அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலி;ல் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள உள்ளார்.
குடியரசு கட்சியின் தேசிய பேராளர் மாநாடு இன்னும் இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் தரப்பு முன்னாள் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதேவேளை ஹிலரி கிளின்ரனே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்படக் கூடிய சாத்தியம் அதிகம் உள்ளமை குறிப்படத்தக்கது.