கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டமொன்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு நான் உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வரும், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை வேட்டையாடும் நோக்கில் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது தெரிகின்றது.
இவ்வாறே எம்மை கட்சி கவனிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கூட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.