Wednesday, 21 November 2018
தாமதமாகிறது ஆப்பிள் AirPods வெளியீடு

தாமதமாகிறது ஆப்பிள் AirPods வெளியீடு Featured

ஆப்பிள் தயாரிப்புக்களுக்கு உலகம் முழுவதும் மிகபெரிய வாடிக்கையாளர் கூட்டமுண்டு . கடந்த செப்டெம்பர் மாதம் ஆப்பிள், iphone 7 மற்றும் 7 Plus ஐ உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தனர் .

Headphone Jack இல்லாத iphone 7 மற்றும் 7 Plus ஐ வெளியிடுவதன் மூலம் வயர்லெஸ் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு தரவுள்ளோம் என்று ஆப்பிள் நிறுவனத்தினர் கூறியிருந்தனர்.

iphone 7 வெளியீட்டின் பின் ஆப்பிள் தங்களது Airpod என்று அழைக்கப்படும் புதிய headphone ஐ வெளியிடுவதாக கூறினார்கள்.
Airpod வழக்கமான headphone போல காட்சியளித்தாலும் இது ஒரு வயர்லெஸாக தொழிற்படும் .காதில் வைத்தால் மட்டுமே இயங்கும் .
iphone, Mac மற்றும் AppleWatch என்பவற்றுக்கிடையில் இலகுவாக மாற்றி இணைத்துக்கொள்ளவும் முடியும் .
பல பயன்களைக் கொண்ட இந்த Airpod $159 விலைகொண்டதாக அக்டோபர் இறுதியில் வெளிவரும் என்று சொல்லப்பட்டது .
ஆனால் தற்போது ‘’இம்மாதம் வெளியிடுவதற்கு ஏற்றநிலையில் Airpod இன்னும் தயாராகவில்லை.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் Airpodஐ தயார்படுத்த,

இன்னும் சில காலம் எங்களுக்கு தேவை என்று கூறியுள்ளது ஆப்பிள் நிறுவனம் .

Last modified on Thursday, 27 October 2016 16:29