Wednesday, 21 November 2018
மீண்டும் திரைக்குவரும் கபாலி

மீண்டும் திரைக்குவரும் கபாலி

பண்டிகை காலங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிப்பெறுவது வழக்கம் .


ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக பண்டிகை நாட்களில் வெளியாவது தவிர்க்கப்பட்டு சாதாரண நாட்களில் மட்டுமே வெளியிடப்படுகிறது.
ஆனால் அந்த குறை இந்த தீபாவளிக்கு இருக்க கூடாது என்பதால்
இறுதியாக வெளியான கபாலி திரைப்படத்தை மீண்டும் தீபாவளியன்று திரையிட சில திரையரங்குகள் முடிவு செய்துள்ளன
‘’இந்த தீபாவளிக்கு தனுஷின் கொடி மற்றும் கார்த்தியின் காஷ்மோரா மட்டுமே பெரிய நட்சத்திரங்களின் படங்கள் . நிறைய திரைப்படங்கள் இல்லாததால் கபாலியை மீண்டும் திரையிட திட்டமிட்டோம் ;தீபாவளி படங்களுக்கு நிகராக கபாலிக்கும் ரிசர்வேஷன் நடைபெறுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர் .

Last modified on Friday, 28 October 2016 13:06