இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் பஞ்சாப்பை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து கலந்து கொள்ள இருந்தார்.
ஈரானை பொறுத்தவரை அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பெண்களும்,பெண் சுற்றுலாப்பயணிகளும்
ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீராங்கனைகளுக்கு அதனையே பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது .
இந்த முடிவுக்கு உடன்படாத ஹீனா போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார் .
இந்தியாவின் சார்பில் ஹீனாவைத் தவிர மற்ற வீராங்கனைகள்
ஹிஜாப் அணிய ஒத்துக் கொண்டுள்ளதால்,அவர்கள் ஈரானில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள்.