
துருக்கியில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

போதை மற்றும் மதுபாவனை இலங்கையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி 2011 ஆம் ஆண்டு செட்டிக்குளம் பிரதேசத்தில் விபத்திற்கு உள்ளானத்தில் அதில் பயணித்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செயயப்பட்ட பீ அறிக்கை போலியானது என தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஆட்டம் போட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய தொகுதிகளின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் எதிர்வரும் வருட முதல் காலாண்டில் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்தக்கூட்டம் நேற்று இரவு இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்டது.
இதன்போது உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் கட்சிக்குள் கொண்டு வரவேண்டிய உள்ளக மாற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்தக்கலந்துரையாடலில் கட்சியின் போசகர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் பங்கேற்றார்.

அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 22ஆம் திகதி முதல் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தமிழக மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடலை மற்றும் பருப்பு வகைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தின் அடிப்படையில் விற்பனை செய்ய முடியாது என சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பிற்கு கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனுக்கு முக்கிய உயர்பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்களை வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.